டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 16 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 42 லட்சத்து 31 ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 733 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 56 ஆயிரத்து 386 ஆக உள்ளது.
கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 95 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோரின் மொத்த என்ணிக்கை மூன்று கோடியே 36 லட்சத்து 14 ஆயிரத்து 434ஆக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அக்டோபர் 27ஆம் தேதி வரை 60 கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 405 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் நேற்று (அக். 27) மட்டும் 12 லட்சத்து 90 ஆயிரத்து 900 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 103 கோடியே 53 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துங்கள் - பத்து மாநிலங்களுக்கு அறிவுரை