டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 12 ஆயிரத்து 514 நபர்களுக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 814ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 251 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 58 ஆயிரத்து 437ஆக உள்ளன.
கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 718ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 36 லட்சத்து 68 ஆயிரத்து 560ஆக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 103 கோடியே 31 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப் பொருள் வழக்கு: ஆர்யன் கான் நண்பர்களும் விடுவிப்பு!