ரஃபேல் போர் விமானங்களை லே எல்லையில் நிறுத்தியுள்ள இந்தியா! - rafale
சீன விமானங்கள் இந்திய எல்லையில் நுழைந்ததாக கருதப்பட்ட நிலையில், இந்தியா ரஃபேல் போர் விமானங்களை லே எல்லையில் நிறுத்தியுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் அதிநவீன ரஃபேல் போர் விமானத்தின் இரண்டு படைப்பிரிவுகள் உள்ளன. ஒரு படைப்பிரிவு ஹரியானா மாநிலத்திலுள்ள அம்பாலாவிலும், மற்றொன்று மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி ஹஷிமாராவிலும் உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட பரஸ்பர விதிகளின்படி, போர் விமானங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்கள் எல்லையின் இருபுறமும் 10 கிமீ தொலைவில் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் எல்லைக்கு சுமார் 1 கிமீ வரை இயக்க அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இருந்த வீரர்களால், மக்கள் விடுதலை ராணுவ விமானப்படையின் (PLAAF) விமானங்கள் இந்திய ரேடாரால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியா சார்பில், அம்பாலா விமான தளத்தில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சீனாவின் நோக்கம் இதுவரை தெரியவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமிங்கலம் வடிவிலான "ஏா்பஸ் பெலுகா" விமானம் சென்னை வருகை!