ETV Bharat / bharat

சர்வதேச விமான சேவை தடை நீட்டிப்பு!

author img

By

Published : Aug 29, 2021, 2:41 PM IST

கரோனா பரவலின் எதிரொலியாக, சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்து அமைச்சகம், civil aviation department
விமானப் போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (ஆக.29) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் விமானம், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமானம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்தத் தடையானது, சர்வதேச சரக்கு விமான சேவைகளுக்கு பொருந்தாது. சர்வதேச விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானப் பாதைகளில், திட்டமிட்டப்படி பயணிக்க அனுமதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாதம் நீட்டிப்பு

முன்னதாக, ஜூலை 31ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த தடையை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து, கடந்த ஜூலை 30ஆம் தேதி விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கரோனா பரவலின் தீவிரம் காரணமாக, சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது.

கரோனா தீவிரம்

இந்தியாவில் நேற்று (ஆக.28) மேலும் 45 ஆயிரத்து 83 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று கோடியே 26 லட்சத்து 95 ஆயிரத்து 30 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று மட்டும் 460 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 37 ஆயிரத்து 830ஆக அதிகரித்துள்ளது. மூன்றாயிரத்து 68 ஆயிரத்து 558 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 840 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை நாட்டில் 51 கோடியே 86 லட்சத்து 42 ஆயிரத்து 929 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 17 லட்சத்து 55 ஆயிரம் 327 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 ஆயிரத்து 265 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 45,083 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.