ETV Bharat / bharat

இன்னல்களைக் கடந்து வலுப்பெற்றுள்ளது நாடு - இது மோடியின் கூற்று

டெல்லி: பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்திருந்தபோதிலும் நாடு வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Mar 23, 2021, 4:11 PM IST

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்பட ஐந்து மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டபோதிலும் நாடு வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

மோடி பேசியது குறித்து மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், "பெருந்தொற்று காலத்தில் நேர்ந்த அனுபவங்களைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். அப்போது, நாடு தீநுண்மியை மட்டும் எதிர்கொள்ளவில்லை பல நாடுகள் சவால்களை எதிர்கொண்டதாக மோடி தெரிவித்தார்.

எல்லைப்பகுதிகளில் பதற்றம், புயல், நிலநடுக்கம், வெட்டுக்கிளி தாக்குதல் போன்ற பல இன்னல்களை எதிர்கொண்டபோதிலும் நாடு வலுப்பெற்றுள்ளதாக மோடி குறிப்பிட்டார். ஒட்டுமொத்த உலகமும் உங்களின் (மோடியின்) ஆற்றலை உணர்ந்தது என" அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, அரசு பொறுப்பில் இருந்துவருவதாகவும் முதலில் மாநிலத்தின் முதலமைச்சர் பின்னர், நாட்டின் பிரதமராகப் பொறுப்பு வகித்துவரும் நிலையிலும் ஒருநாள்கூட விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லை என மோடி குறிப்பிட்டதாக மேக்வால் கூறினார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.