ETV Bharat / bharat

102 நாள்களுக்குப் பிறகு 40,000 ஆக  குறைந்த கரோனா பாதிப்பு - கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஜூன் 28) 56 ஆயிரத்து 994 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jun 29, 2021, 1:28 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 566 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தமாகப் பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 897 ஆக அதிகரித்துள்ளது.

56,994 டிஸ்சார்ஜ்

நேற்று (ஜூன் 28) மட்டும் ஒரேநாளில் 56 ஆயிரத்து 994 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 93 லட்சத்து 66 ஆயிரத்து 601ஆக உள்ளது.

907 உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 907 உயிரிழந்த நிலையில், இதுவரை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

முதலிடத்தில் கேரளா

கேரளாவில்தான் மாநிலத்திலேயே அதிகமான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் எட்டாயிரத்து 63 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.