ETV Bharat / bharat

24 மணி நேரத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு- 42 ஆயிரம் பாதிப்பு!

author img

By

Published : Jul 21, 2021, 10:34 AM IST

நாட்டில் புதிதாக 42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

India COVID-19 tracker: state-wise report

டெல்லி : இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 15 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 36 ஆயிரத்து 977 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 998 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று பாதிப்பை பொறுத்தமட்டில் தொடர்ந்து 30ஆவது நாளாக 3 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்து 2.27 விழுக்காடு ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 3 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 337 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரத்து 687 பேர் குணமடைந்துள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தற்போதுவரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 170 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 4 லட்சத்து 18 ஆயிரத்து 480 ஆக உள்ளது. இது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தடுப்பூசிக்குப் பயந்த சினேகா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.