ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த 24 மணிநேரத்தில், 31 ஆயிரத்து 443 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியா முழுவதும் இதுவரை 3 கோடியே 9 லட்சத்து 5 ஆயிரத்து 819 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து நேற்று (ஜூலை 13) ஒரே நாளில் இந்தியா முழுவதும் 49 ஆயிரத்து 7 பேர் குணமடைந்துள்ளனர். அந்தவகையில் மொத்தமாக 3 கோடியே 63 லட்சத்து 720 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை மொத்தம் 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.