ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து மீளும் இந்தியா.. தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்திற்கும் குறைவு.. - கரோனா

இந்தியாவில் நீண்டு நாள்களுக்கு பின்னர், தினசரி கரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது

corona
கரோனா
author img

By

Published : Jun 1, 2021, 10:03 AM IST

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 510 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில், அதிகளவில் கரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 943 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். நீண்ட நாள்களாக கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு, 27 ஆயிரத்து 936 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

நேற்று (மே.31) 2,795 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 59 லட்சத்து 47 ஆயிரத்து 629 ஆக உள்ளது.

தற்போது 18 லட்சத்து 95 ஆயிரத்து 520 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 21 கோடியே 60 லட்சத்து 46 ஆயிரத்து 638 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காற்றில் பரவும் வீரியமிக்க புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.