டெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (மே7) வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,545 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 98 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனா தொற்றிற்காகச் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 303 ஆக உள்ளது.
நேற்று ஒரே நாளில் 22 பேர் கரோனவால் இறந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து 98.47% பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (மே6) ஒரே நாளில் 3 ஆயிரத்து 168 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 544 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி திட்டம் மூலம் இதுவரை 190 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க:மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?