டெல்லி: அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலை ஹமாஸ் அமைப்பினர் தாக்கினர். மேலும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் நாட்டிலிருந்து பலரைப் பிணையக் கைதிகளாகச் சிறை பிடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் தொடங்கியது. இஸ்ரேல் காஸா மீது தங்களது தாக்குதலைத் தொடங்கினர்.
-
An insightful conversation this morning with the Minister of Enterprise @adolfo_urso.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Exchanged the experiences of Made in Italy and Made in India.
Confident that our discussion today will expand the scope of our economic partnership. pic.twitter.com/Rzgp6CKqYJ
">An insightful conversation this morning with the Minister of Enterprise @adolfo_urso.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 3, 2023
Exchanged the experiences of Made in Italy and Made in India.
Confident that our discussion today will expand the scope of our economic partnership. pic.twitter.com/Rzgp6CKqYJAn insightful conversation this morning with the Minister of Enterprise @adolfo_urso.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 3, 2023
Exchanged the experiences of Made in Italy and Made in India.
Confident that our discussion today will expand the scope of our economic partnership. pic.twitter.com/Rzgp6CKqYJ
இந்த போரின் காரணமாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பல மக்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தில் வாழும் குழந்தைகள் பெண்கள் எனப் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களுக்கு மேல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இந்தியா பயங்கரவாதத்தை ஒரு ஆதரிக்காது எனவும், பாலஸ்தீனத்தின் உரிமைகள் மற்றும் இறையாண்மையைக் குறித்தும் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இத்தாலி நாட்டின் பிரதிநிதியுடன் சேர்ந்து ரோம் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும்போது, "இந்தியா பயங்கரவாதம் தொடர்பாகத் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அதே போல் பாலஸ்தீனத்தின் உரிமைகள் மற்றும் இறையாண்மையும் அவசியம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என இரண்டு நாடுகள் மீது சமமான தெளிவான நிலைப்பாடு உள்ளது. மேலும், இத்தாலி அரசைப் போல இந்தியாவும் காசாவிற்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கி வருகிறது." எனத் தெரிவித்தார்.
இத்தாலி ரோமில் உள்ள செனட் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் இணைச் செயலாளர் அமர்வில் இன்று (நவ.3) கலந்து கொண்டு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும் போது, "பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது இதே நேரத்தில் பாலஸ்தீனப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்பட வேண்டும்." எனத் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமானது. எந்த ஒரு நிலையிலும் போர் மற்றும் பயங்கரவாதம் மூலம் தீர்வு காண முடியாது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் தற்போதைய சூழ்நிலையில் மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட வேண்டும் ஹமாஸன் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த முதல் தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
அதே நேரத்தில், பாலஸ்தீனத்தில் உரிமைகள் மற்றும் இறையாண்மையைக் காக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், சமநிலை தவறாமல் இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்குவதை இந்தியா வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு அதரவாக அமெரிக்கா.. 14 பில்லியன் டாலர் வழங்க வெள்ளை மாளிகை ஒப்புதல்!