ETV Bharat / bharat

இந்தியா கூட்டணி காணொலி ஆலோசனை கூட்டம்: மு.க.ஸ்டாலின், கனிமொழி, கார்கே, ராகுல் பங்கேற்பு! - இந்தியா கூட்டணி காணொலிஆலோசனைகூட்டம்

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்து வரும் நிலையில், அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

INDIA Bloc virtual meeting
INDIA Bloc virtual meeting
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 1:51 PM IST

டெல்லி : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. முதல் தவணையாக நான்கு முறை இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக காணொலி காட்சி வாயிலாக இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.

  • #WATCH | Tamil Nadu CM & DMK leader MK Stalin and party leader Kanimozhi Karunanidhi attend the meeting of INDIA bloc leaders via video conferencing

    The meeting is underway to review seat sharing, participation in Bharat Jodo Nyay Yatra and other issues. pic.twitter.com/AzAFHNfF6b

    — ANI (@ANI) January 13, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீட்டிற்கான முன்னேற்பாடுகள், கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

  • NCP chief Sharad Pawar attends the meeting of INDIA bloc leaders via video conferencing

    The meeting is underway to review seat sharing, participation in Bharat Jodo Nyay Yatra and other issues.

    (Pics source: NCP) pic.twitter.com/SAm6l9a8h4

இரண்டு நாட்கள் இடைவெளியில் இம்பால் அடுத்து தவுபூல் பகுதியில் ராகுல் காந்தி தொடங்க உள்ள பாரத் ஜோடோ நியாய யாத்ராவில் எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு உள்ளிட்ட மற்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

  • INDIA party leaders will be meeting over Zoom tomorrow January 13th, 2024 at 11:30 am. They will review various issues like seat-sharing talks that have begun, participation in Bharat Jodo Nyay Yatra that will begin from Thoubal near Imphal day after tomorrow, and other important…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி இந்த அலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : நேபாளத்தில் பேருந்து விபத்து : 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.