ETV Bharat / bharat

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் - டெல்லி விரைந்த எதிர்க்கட்சி தலைவர்கள்! தொகுதி பங்கீடு சாத்தியமாகுமா? - இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் 4வது கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் டெல்லி விரைந்து உள்ளனர்.

INDIA bloc Meeting
INDIA bloc Meeting
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:49 PM IST

டெல்லி : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணியின் 4வது கட்டமாக டிசம்பர் 19ஆம் தேதியில் டெல்லி கூடுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய கூட்டணிக்கு அமையவில்லை.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான திசையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தான் நாளை (டிச. 19) டெல்லியில் இந்தியா கூட்டணியின் 4வது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அவசர உணர்வு எதிர்க்கட்சிகளிடையே எழுந்து உள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் 4வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லி விரைந்து உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட விரைந்து உள்ளனர்.

இதனிடையே ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவா - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரான் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து வரும் டிசம்பர் 21ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 3 மாதங்களுக்கு பின் கூடும் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி! என்னென்ன முடிவுகள் எடுக்க உள்ளன? ஒரு அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.