ETV Bharat / bharat

இந்தியா - நேபாளம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கம்!

4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த நேபாள பிரதமர் பிரசண்டாவுடன், பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்ப் தெரிவித்து உள்ளது.

PM
PM
author img

By

Published : Jun 1, 2023, 6:59 PM IST

டெல்லி : இந்தியா - நேபாளம் இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா, குர்தா - பிஜல்புரா பகுதிகளுக்கு இடையிலான ரயில்வே லைனின் இ- பிளானை கூட்டாக வெளியிட்டனர்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் கமல் பிரசண்டாவுக்கு பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். ராஜ பாதைக்கு வந்த நேபாள பிரதமருக்கு இந்திய வீரர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். தொடர்ந்து அங்கிருந்த மகாத்மா காந்தி சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் குடியிருப்பில் உள்ள ஐதராபத் இல்லத்தில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் இரு தரப்பு ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா - நேபாளம் இடையிலான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தகம், எரிசக்தி, இரு நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியா - நேபாளம் இடையிலான உறவுகளை இமாலய உயரத்திற்கு கொண்டு செல்ல தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் பிரசண்டாவுடனான தனது கூட்டணியை எதிர்காலத்தில் சூப்பர் ஹிட்டாக மாற்ற பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறினார்.

இந்தியா - நேபாளம் இடையிலான கலாசார, மற்றும் மத உறவுகளை மேம்படுத்த, ராமாயணம் தொடர்பான திட்டங்களை இரு நாடுகளுக்கு இடையே விரைவுபடுத்த வேண்டும் என்று இருவரும் முடிவு செய்ததாக பிரதமர் மோடி கூறினார். முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தின் ருபாய்திஹா டவுன் மற்றும் நேபாளத்தில் உள்ள நேபல்கஞ்ச் இடையேயான சோதனைச் சாவடியை இருவரும் காணொலி வாயிலாக திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, குர்தா - பிஜல்புர இடையிலான ரயில்வே லைனின் இ- பிளானையும், பத்னாஹாவில் இருந்து நேபாளத்திற்கான சரக்கு ரயில் போக்குவரத்தையும் இருநாட்டு பிரதமர்களும் துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தன் ட்விட்டர் பக்கத்தில், இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பு என்பது இந்தியா - நேபாளம் இடையிலான பன்முக உறவுகளின் முழுவரம்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்பாக அமைந்ததாக பதிவிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிரசாண்டா, அதன் பின் முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ள அவர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Z plus பாதுகாப்பை மறுக்கும் பக்வந்த் மான்... பஞ்சாப் முதலமைச்சரின் திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.