புளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்திய அணி பயணித்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமகா ஷிம்ரன் ஹெட்மயர் 61 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து இந்திய அணி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது. 11 மணி அளவில் இந்திய அணி 14 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 151 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 78 ரன்களும், சுப்மான் கில் 67 ரன்களும் களத்தில் இருந்தனர். இந்திய அணி வெற்றியை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருகிறது.