டெல்லியைத் தளமாகக் கொண்ட ஷெல் நிறுவனங்களிடமிருந்து சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் சட்டவிரோதமான முறையில் தங்குமிடங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்குத் தகவல் கிடைத்தது. வழக்கத்திற்கு மாறான அளவில் அதிகளவு பணம் முதலீடு செய்தல், நிகர லாபங்கள் அதிகரித்தல், சிட்பண்ட் நிறுவனங்கள் குறித்த தகவல்களும் வெளிவரத் தொடங்கின.
இதனையடுத்து வருமான வரித்துறையினர் வட இந்தியாவின் கான்பூர், கோரக்பூர், நொய்டா, டெல்லி உள்ளிட்ட 16 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தச் சோதனையில், கடன் விவரங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே உள்ளதும், அவை உண்மையான வணிக நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் ஒருவர் டாக்ஸி ஓட்டுநராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு 11 வங்கிக் கணக்குகள் உள்ளதும், பெரிய அளவிலான தொகையை அதில் வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்கள் உண்மையான கணக்குகளை நிர்வகிப்பதில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த முறைகேட்டில் பல்வேறு முக்கிய நபர்களுக்குத் தொடர்புடையது தெரியவந்துள்ளது. இதுவரை 52 லட்ச ரூபாயும், தங்க வைர நகைகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களையும் ஆய்வுசெய்த பின்னர் மொத்த மதிப்பும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டிக்கு காப்பீடு தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் நிதி நிறுவனம்!