ஹைதராபாத் : உப்பு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆங்கிலேயருக்கு மிகவும் இலாபகரமான வணிகமாக இருந்தது. இதனால், இந்தியர்கள் உப்பை சுயமாக உற்பத்தி செய்வதையும் விற்பதையும் தடை செய்யும் தொடர்ச்சியான சட்டங்களை அவர்கள் அறிமுகப்படுத்தினர்.
இது ஏழை எளிய மக்கள் அனைவரையும் பாதித்தது. மறுபுறம் ஆங்கிலேய வணிகர்களுக்கு லாபத்தை கொடுத்தது. இதற்கு எதிராக உப்பு சத்தியாகிரகத்துக்கு அண்ணல் காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் மாநாட்டில் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஒத்துழையாமையின் முதல் போராட்டம்
அண்ணலின் அழைப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதிலுமிருந்து அகிம்சாவாதிகள் 'உப்பு எடுக்க தடை விதிக்கும் சட்டத்தை' உடைக்கும் பயணத்தைத் தொடங்கினர். இது மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தின் முதல் கட்டமாகும்.
உப்பு தடைச் சட்டத்தால் ஒடிசா பெரிதும் பாதிக்கப்பட்டது, ஏனெனில் இது மாநிலத்தில் ஒரு பெரிய தொழிலாக இருந்தது. விவசாயத்துக்கு அடுத்தப்படியாக இங்கு உப்பு எடுத்தலே முக்கிய தொழிலாக இருந்தது.
இஞ்சுடி- இரண்டாவது தண்டி
ஒடிசாவில் உப்பு சத்தியாகிரகம் 1930இல் உத்கல் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஹரே கிருஷ்ண மகாதாப் தலைமையில் தொடங்கப்பட்டது. ஒடிசாவில் உப்பு யாத்திரை நடைபெற்ற 'இஞ்சுடி' இரண்டாவது தண்டி என்று அழைக்கப்பட்டது.
இங்குள்ள சாந்தி ஸ்தூபி மற்றும் ஸ்மிருதி பீடம் (நினைவு) ஆகியவை உப்பு சத்தியாகிரகத்தில் கிராமத்தின் பங்கை இன்றளவும் நினைவூட்டுகின்றன. காந்தியின் அழைப்பைத் தொடர்ந்து, கோபபந்து சௌத்ரி மற்றும் ஆச்சார்யா ஹரிஹர் தாஸ் தலைமையில் 21 தன்னார்வலர்கள் கட்டால் சுவர்க் ஆசிரமத்திலிருந்து இஞ்சுடிக்கு ஏப்ரல் 6, 1930 அன்று உப்பு சத்தியாகிரகத்தை நடத்தினார்கள்.
போராட்டம்- தடியடி- கைது
ஏப்ரல் 9 ஆம் தேதி கோபபந்து சௌத்ரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குழுவுக்கு ஆச்சார்யா ஹரிஹர் தாஸ் தலைமை வகித்தார். இக்குழு ஏப்ரல் 12 அன்று பாலசோரை சென்றடைந்தது.
1930 ஏப்ரல் 13ஆம் தேதி இந்த அகிம் ஏப்ரல் 1930 அன்று அவர்கள் இஞ்சூடியில் உப்புச் சட்டத்தை மீறினர். உப்பு சட்டத்தை மீறியதற்காக பல அகிம்சாவாதிகள் கைது செய்யப்பட்டனர், பலர் பிரிட்டிஷ் படைகள் நடத்திய தடியடி தாக்குதலில் காயமடைந்தனர். உப்பு பதப்படுத்தலுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான மண் பானைகளும், காவல்துறையினரால் உடைக்கப்பட்டன.
சுதந்திர போராட்டத்தின் சாட்சி
பாலசூரில் உள்ள இஞ்சூடியின் உப்பு சத்தியாகிரகம் மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரைக்குப் பிறகு அடுத்த மிகப்பெரியதாக கருதப்படுகிறது, மேலும் இதனை பெரும்பாலானோர் 'இரண்டாவது தண்டி' அல்லது 'ஒடிசாவின் தண்டி' என்றே குறிப்பிடுகின்றனர்.
உப்புச் சட்டம் உடைக்கப்பட்ட இடம் சுதந்திரப் போராட்டத்திற்கு சாட்சியாக உள்ளது. இங்கு ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டிருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அவர்களின் மகத்தான செயலையும் நினைவுகூர எதுவும் செய்யப்படவில்லை.
தேசிய அங்கீகாரம் கிடைக்குமா?
கடல் அரிப்பு மற்றும் இறால் மீனவர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக அகிம்சாவாதிகளின் இந்த நினைவுகள் அழிந்து வருகின்றன. 2003 ஆம் ஆண்டில் இந்த இடம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டாலும், சரியான ஊக்குவிப்பு இல்லாததால் ஒரு சிலரை மட்டுமே ஈர்க்கிறது.
இஞ்சுடி அனைத்து இந்தியர்களுக்கும் மறக்க முடியாத இடம் ஆனால் இந்த வரலாற்று இடம் இன்னும் தேசிய அங்கீகாரம் பெறவில்லை.