ETV Bharat / bharat

கேரளாவில் கனமழை; பத்தனம்திட்டா அணை நிரம்பியது!

author img

By

Published : Oct 16, 2021, 3:12 PM IST

Updated : Oct 16, 2021, 4:14 PM IST

கேரளாவில் கனமழை பெய்துவரும் நிலையில் பத்தனம்திட்டா அணை முழு கொள்ளளவை எட்டியது. இதற்கிடையில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kerala
Kerala

திருவனந்தபுரம் : அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பிவருகின்றன. குறிப்பாக திருவனந்தபுரம், பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது.

இதனால் பத்தனம்திட்டாவில் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் மக்கள் அத்தியாவசியமின்றி பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Incessant rains lash Kerala; 'Red Alert' in 5 districts
கேரளாவில் கனமழை எச்சரிக்கை

பத்தனம்திட்டா பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 40 கி.மீ. காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், திருவனந்தபுரம், ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாக்குளம் மற்றும் திரிச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தின் பொன்முடி மலைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் உள்பட பொதுமக்கள் யாரும் செல்லக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஏதேனும் உதவிகள் தேவைப்படும் நிலையில் அழைப்பு மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் (கட்செவி) வழியாகவோ தொடர்புக்கொள்ளலாம். உதவி எண்கள், 8606883111, 9562103902, 9447108954, 9400006700 ஆகும். இதேபோல தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க: இரண்டு மாநிலங்களை உலுக்கிய குலாப் புயல்...!

Last Updated : Oct 16, 2021, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.