திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு இடுக்கியில் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகள், அங்கு வளர்க்கப்படும் செம்மறி ஆடுகள், கோழிகள் அடங்கிய ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் நேற்று நடந்த ஏலத்தில், பூசணிக்காய் ஒன்று 47,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் நடந்த ஏலங்களில் செம்மறி ஆடுகள் மற்றும் கோழிகள் அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஏலம் போயிருந்தன. இவ்வளவு பெரிய தொகையில் விற்பனையாகி வரலாற்றில் இடம்பிடிப்பது இதுவே முதல் முறை.
இதையும் படிங்க: ஹைதராபாத் பாலாபூர் கணேஷ் லட்டு ரூ.24 லட்சத்திற்கு ஏலம்