மும்பை (மகாராஷ்டிரா) : மும்பையில் மேலும் இருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை, தேசிய வைராலஜி நிறுவனம், தேசிய ஒருங்கிணைந்த நோய் ஆய்வுத் திட்டத்தின் அறிக்கையின்படி, மும்பையில் மேலும் 2 பேர் இன்று (டிசம்பர் 6) ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 37 வயதுடையவர் என்றும்; மற்றொருவர் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 36 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 10ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தலைமைப் பதவி: ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு