கர்நாடக மாநிலத்தில், ஆபத்தான நிலையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்தை சட்டவிரோதமாக விற்பனைசெய்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூவரும் மருத்துவத் துறையில் வேலை பார்த்துவந்தது தெரியவந்தது. கைதான பீமாசங்கர் அரபோலா (27) ஒரு தனியார் சோதனை நிலையத்திலும், லட்சுமிகாந்தா (20) ஒரு மருந்துக் கடையிலும், ஜிலானி கான் (32) செவிலியாகவும் பணியாற்றிவந்துள்ளனர்.
மேலும், இக்கும்பல் பெங்களூரு, பெலகாவி ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தை ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
அவர்களிடமிருந்த பதினான்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்துகள் பறிமுதல்செய்யப்பட்டதுடன், மூவர் மீதும் பிரம்மபூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.