டெல்லியில் நேற்று ஐஐடி டெல்லியின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். அப்போது பேசிய முர்மு, "கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடிக்கள் உலகிற்கு நிருபித்துள்ளன. ஒவ்வொரு ஐஐடிக்களின் கதை சுதந்திர இந்தியாவின் கதை. இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐஐடிக்கள் பெரும் பங்காற்றியுள்ளன.
ஐஐடியின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். ஐஐடிக்களிலும் படித்தவர்களில் சிலர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். ஐஐடிக்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது. கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூகம், செயல்பாடு, இதழியல், இலக்கியம் மற்றும் அரசியல் என வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஐஐடியில் படித்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.
வரும் 2047ஆம் ஆண்டு நாட்டின் 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம் என்று மக்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஆகவே அதற்கேற்றார் போல கல்வி நிறுவனங்களை இப்போதே தயார் செய்ய வேண்டும். எதிர்கால சவால்களை இந்திய ஐஐடிக்கள் மிக எளிதாக எதிர்கொள்ளும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிஷீல்டு செலுத்திய மகள் இறந்துவிட்டதாக தந்தை வழக்கு... சீரம் இந்தியா, பில்கேட்ஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு...