சென்னை: இந்திய தொழில்நுட்ப கழகமான ஐஐடி மெட்ராஸ் (The Indian Institute of Technology Madras) ஆசிரியர் உறுப்பினரான பேராசிரியர் ரஜ்னிஸ் குமாருக்கு, 2022 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள (CSIR - Council of Scientific and Industrial Research) அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் ஆண்டு தோறும் சாந்தி ஸ்வரூவ் பட்நாகர் என்ற விருது வழங்கப்படுகிறது. உயிரியல், வேதியியல், பொறியியல், கணிதம், மருத்துவம், இயற்பியல், சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், சிறந்த விளங்கும் ஆராய்ச்சிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன இயக்குநரான டாக்டர் சாந்தி ஸ்வரூவ் பட்நாகரின் பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. நியூக்ளியேஷன், கிளாத்ரேட் ஹைட்ரேட்டுகளின் வளர்ச்சி, திட ஹைட்ரேட்டுகளில் கார்பன் டை ஆக்ஸைடு (CO2) வரிசைப்படுத்துதல் மற்றும் கடல் வாயு ஹைட்ரேட்டுகளில் இருந்து மீத்தேன் எடுப்பது உள்ளிட்ட ஆய்வுகளில் பேராசிரியர் ரஜ்னிஷ் சிறந்து விளங்கினார்.
பேராசிரியர் ரஜ்னிஷ் குமார், ஐஐடி மெட்ராஸில், கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில், மிகவும் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர். விருது பெற்ற பேராசிரியர் ரஜ்னிஷ் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் வி.காமகொடி, “ரஜ்னிஷ் குமாருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது கிடைத்துள்ளது. கெமிக்கல் இன்ஜினியரிங் ஆராய்ச்சியில் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் என்பதற்கு இந்த விருதே சான்றாகும். அவரது சாதனைகளை எண்ணி ஐஐடி மெட்ராஸ் பெருமை கொள்கிறது” என்றார்.
தனது ஆராய்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்த பேராசிரியர் ரஜ்னிஸ் குமார், “பொறியியல் அறிவியலுக்காக, சாந்தி ஸ்வரூவ் பட்நாகர் விருதினை பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல மாணவர்களின் கடின உழைப்பால் இந்த விருது கிடைத்துள்ளது. எனது ஆராய்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கும், நிதி வழங்கும் நிறுவனங்களுக்கும் நன்றி” என்று கூறினார். டாக்டர் ஒய்பிஜி வர்மா, வேதியியல் பொறியியலில் சிறந்து விளங்கியதற்காக, 2020 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூவ் பட்நாகர் விருதைப் பெற்றார்.
இதையும் படிங்க: அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவு தினம்