காசர்கோடு: ரஞ்சித்தின் வாழ்க்கை பாதாளத்திலிருந்து மலை உச்சிக்கான பயணமாக இருந்துள்ளது. தனது சமூக-பொருளாதார நெருக்கடிகளில் மனதை இழக்காமல், ரஞ்சித் கல்வியை தனது ஊக்கமாக மாற்றி அனைத்து நெருக்கடிகளையும் எதிர்த்துப் போராடினார்.
அந்த முகநூல் பதிவில், ”அவர் தனது வீட்டின் புகைப்படத்தையும் இணைத்து, “இதுதான் நான் பிறந்து வளர்ந்த வீடு. நான் இன்னும் இங்கேதான் வாழ்கிறேன். ஐஐஎம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) உதவி பேராசிரியர் இங்குதான் பிறந்தார் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். எனது கதை என்பது இந்த வீட்டிலிருந்து ஐஐஎம் ராஞ்சிக்குவரைக்குமானது. இந்த கதையை அறிந்து குறைந்தது ஒரு நபராவது அவர்களின் கனவுகளை வளர்த்துக்கொண்டால், அதுவே எனது வெற்றி.
மேல்நிலைப் பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், தனது குடும்ப சூழலுக்காக படிப்பை கைவிட நினைத்த இளைஞன், இன்று ஐஐஎம் ராஞ்சியில் உதவி பேராசிரியராக நியமனம் பெற்று அந்நிலத்திற்கு பெருமைச் சேர்த்துவிட்டார்.
டாக்டர் சுபாஷ் என்பவரின் வழிகாட்டுதலில், ரஞ்சித் தனது கல்வியை கேரளா ராஜபுரம் செயின்ட் பியஸ் கல்லூரி, கேரள மத்திய பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயின்றுள்ளார்.
ஒருவேளை, உங்களுக்கு மேலே, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய கூரை இருக்கலாம். நான்கு பக்கங்களிலும் இடிந்து விழக்கூடிய சுவர்கள் இருக்கலாம். ஆனால், வானத்திற்காக கனவு காணுங்கள். ஒரு நாள், அந்த கனவுகளில் பறக்கும் வெற்றியின் உச்சியை நீங்கள் அடையலாம்”.
ஆம், சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தெறிவதற்கான ஒரே வழி கல்வி மட்டும்தான் என்பதை ரஞ்சித்தின் கதை நமக்கு உணர்த்துகிறது.
இதையும் படிங்க: கள்ளச்சந்தையில் தடுப்பூசி விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை