உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அலுவலர் அகிலேஷ் மிஸ்ரா. போக்குவரத்துத்துறை சிறப்பு செயலாளரான இவர், அண்மையில் செய்த சுவையான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சாலை ஓரத்தில் உள்ள காய்கறியில் அமர்ந்து அகிலேஷ் மிஸ்ரா காய் விற்பது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்ட அகிலேஷ் மிஸ்ரா, அந்த புகைப்படத்தில், தக்காளி கிலோ ரூ.20 எனக் கேப்ஷன் வைத்திருந்துள்ளார். இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரத்தில் அதை பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார் மிஸ்ரா.
ஆனால் அதற்குள் அதை ஸ்கீரன்ஷாட் எடுத்த பேஸ்புக் வாசிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
அகிலேஷ் மிஸ்ரா விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய அகிலேஷ் மிஸ்ரா, "உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, காய்கறி கடைக்கார பெண்மணி ஒருவர் தனது குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும், எனவே சிறிது நேரம் மட்டும் கடையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
![காய்கறி விற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12880590_up1.jpg)
எனவே சிறிது நேரம் கடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டேன். அப்போது எனது நண்பர் அதைப் புகைப்படம் எடுத்து, எனது போனிலிருந்து பேஸ்புக் பக்கத்தில் விளையாட்டாக வெளியிட்டார்.
இது எனக்கு சிறிது நேரத்திற்குப் பின் தான் தெரியவந்தது. உடனே பேஸ்புக்கிலிருந்து நீக்கிவிட்டேன்" என விளக்கமளித்துள்ளார்.
![வைரலான பேஸ்புக் போஸ்ட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12880590_up.jpg)
அகிலேஷ் மிஸ்ரா இயல்பிலேயே கலகலப்பான மனிதராகவும், பொதுமக்களுடன் ஆர்வமாக பழகக்ககூடியவராகவும் உத்தரப் பிரதேசத்தில் அறியப்படுகிறார்.
இதையும் படிங்க: வங்கி ஊழியர்களுக்கு நற்செய்தி - ஓய்வூதியம் உயர்வு!