சாமராஜ்நகர்: இந்திய விமான படைக்குச் சொந்தமான இலகு ரக ராணுவ பயிற்சி விமானம் 'கிரண்' இயந்திர கோளாறு காரணமாக கர்நாடகாவில் சாமராஜ்நகர் அருகே வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று (ஜூன் 1) 12 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கிரண்' விமான இலகு ரக விமானம் ஆகும். இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இயந்திர கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதனை உணர்ந்த விமானிகள் உடனடியாக பாராசூட்டை பயன்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேறி உயிர்பிழைத்தனர்.
கோளாறு ஏற்பட்ட விமானம் சாமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள போக்பூர் அருகே வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதை கண்ட பொதுமக்கள் அப்பகுதியில் குவியத் துவங்கினர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட காவல்துறையினர், விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணையைத் துவங்கி உள்ளனர்.
-
A Kiran trainer aircraft of the IAF crashed near Chamrajnagar, Karnataka today, while on a routine training sortie. Both aircrew ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident.
— Indian Air Force (@IAF_MCC) June 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A Kiran trainer aircraft of the IAF crashed near Chamrajnagar, Karnataka today, while on a routine training sortie. Both aircrew ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident.
— Indian Air Force (@IAF_MCC) June 1, 2023A Kiran trainer aircraft of the IAF crashed near Chamrajnagar, Karnataka today, while on a routine training sortie. Both aircrew ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident.
— Indian Air Force (@IAF_MCC) June 1, 2023
விமான விபத்துக்குள்ளானது குறித்து இந்திய விமான படை அதன் ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விமானப் படையின் கிரண் பயிற்சி விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.