பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில் நேற்று (ஜூன் 2) ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பொது இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உங்களால் அரசாங்கத்தை நடத்த முடியாவிட்டால் என்னிடம் கொடுங்கள்.
ஒரு அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவேன். பாஜக உங்களுடையது அல்ல. ரத்தத்தால் நாங்கள் பாஜகவை உருவாக்கியுள்ளோம். எங்கள் கடின உழைப்பின் மூலம் நீங்கள் அதிகாரத்தை அனுபவிக்கிறீர்கள்.
ஒரு வருடமாக ஒலிபெருக்கிகளுக்கு எதிராகப் போராடினோம். இதுவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றவில்லை. எனவே, இந்த மாதம் 8 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு 10-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஆதரவு அளிக்க உள்ளன" என்றார். முன்னதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை 15 நாட்களுக்குள் அகற்ற மாநில அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் இரவு 10 - காலை 6 மணி வரை ஒலிபெருக்கி உபயோகப்படுத்த தடை