பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் நேற்று (ஜூன் 22) தலைநகர் டெல்லிக்குச் சென்றார். பிகாரில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் குழப்பம் நிலவிவருகிறது. அத்துடன் ஒன்றிய அமைச்சரவையில் விரிவாக்கம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிதிஷ் குமார் பேட்டி
இந்த விவகாரங்கள் குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நிதிஷ் குமார், "நான் சொந்த காரணங்களுக்காவே டெல்லி வந்தேன். கண்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக வந்தேன்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்த முடிவுகள் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடியே எடுப்பார். லோக் ஜனசக்தி கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நான் எந்தவிதத்திலும் காரணமில்லை.
இதுபோன்ற பிளவுகள் ஏதேனும் தவறுகளால் ஏற்பட்டிருக்கும். இந்த உள்கட்சி விவகாரங்களை அவர்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தங்க மனிதன் குஞ்சல் பட்டேல் தற்கொலை!