ETV Bharat / bharat

22 யூ-ட்யூப் சேனல்களுக்குத் தடை- தவறான செய்தி பரப்பியதால் நடவடிக்கை!

author img

By

Published : Apr 5, 2022, 9:12 PM IST

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று 22 யூ - ட்யூப் சேனல்களை தடை செய்துள்ளது. இந்த சேனல்களுக்கு 260 கோடிக்கும் மேல் பார்வையாளர்கள் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 யூட்யுப் சேனல்களுக்கு தடை- தவறான செய்தி பரப்பியதால் நடவடிக்கை!

டெல்லி: இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 5) நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் பொது திட்டங்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்பியதாக 22 யூ-ட்யூப் சேனல்களை தடைசெய்துள்ளது. இதில் 4 பாகிஸ்தான் சேனல்களும் அடங்கும். மூன்று ட்விட்டர் கணக்குகள் மற்றும் ஒரு ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 முதல், தேசியப்பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாடு, பொது ஒழுங்கு குறித்த சட்டத்தின் அடிப்படையில் இந்த சேனல்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், 'தடைசெய்யப்பட்ட யூ-ட்யூப் சேனல்கள் இந்திய ராணுவம் , ஜம்மு-காஷ்மீர் குறித்த தவறான தகவல்களை பரப்பியுள்ளன. இந்த சேனல்களுக்கு 260 கோடி பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகவும் சிக்கலான நிகழ்வுகள் குறித்த பொய்யான தகவல்களை பரப்பியுள்ளது. மேலும் வெளியுறவுத்துறை குறித்த தவறான செய்திகளால் பொதுமக்கள் பாதிப்படைய வாய்ப்பு இருப்பதால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021இல் அமலுக்கு வந்த தேசிய தடுப்புச்சட்டத்தின்கீழ், யூ-ட்யூப் சேனல்களைத் தடை செய்வது இதுவே முதல் முறையாகும். மேலும் இதன் அடிப்படையில் மேலும் 78 யூ-ட்யூப் சேனல்கள் தடைசெய்யக்கூடிய நிலையில் உள்ளது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய யூ-ட்யூப் சேனல்கள் முறையாக அனுமதிக்கப்பட்ட மற்ற சேனல்களின் லோகோக்களைப் பயன்படுத்துவதால் பொதுமக்கள் இந்த பொய்யான தகவலை நம்பும் அபாயம் உள்ளதாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:Today market updates: சென்செக்ஸ் 435 புள்ளிகள் வீழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.