பதாவூன் (உத்தரப்பிரதேசம்): அஜய் என்ற அகிலேஷ் என்னும் இளைஞர் 2 வருடங்களுக்கு முன்னதாக டெல்லியில் வேலை செய்து வந்து உள்ளார். அப்போது, அவர் குஷ்பூ என்ற பெண்ணை சந்தித்து உள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான குஷ்பூவின் பெற்றோர், டெல்லியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அஜய் - குஷ்பூ இடையே காதல் மலர்ந்து உள்ளது.
இதனையடுத்து குஷ்பூ தனது பெற்றோரை விட்டு பிரிந்து வந்து அஜய்யை திருமணம் செய்து உள்ளார். பின்னர், இருவரும் உத்தரப்பிரதேச மாநிலம் பதாவூன் பகுதியில் உள்ள புதெலி என்ற கிராமத்தில் வசித்து வந்து உள்ளனர். அதேநேரம், அஜய்யின் தாய் தந்தை இருவரும் பரேலியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். மேலும், அஜய் தனது இரு சகோதரிகள் உடன் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) காலை அஜய், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் 8 மாத பெண் குழந்தையை கோடாரியால் கொடூரமாக வெட்டி கொன்று உள்ளார். இந்த சம்பவம், அஜய்யின் இரு சகோதரிகளின் கண் முன்னே நிகழ்ந்து உள்ளது. இதனால் 5 மற்றும் 14 வயதினை உடைய அஜய்யின் இரு சகோதரிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும், அஜய்யின் மனைவியான குஷ்பூ மீண்டும் மீண்டும் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என அஜய்யை வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஓ.பி.சிங் கூறுகையில், “நாங்கள் சம்பவம் குறித்து அறிந்து இங்கு வந்து உள்ளோம். தடகங்ச் கோத்வாலி பகுதியைச் சேர்ந்த அகிலேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையை கோடாரியால் கொலை செய்து உள்ளார். இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நேற்று (ஆகஸ்ட் 15) மாலை அஜய்யும், அவருடைய மனைவியும் சண்டை போட்டு உள்ளனர்.
அஜய்யின் மனைவி தனது பிறந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என அஜய்யை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்து உள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும், அஜய் கொலை செய்ததற்கான சரியான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. தற்போது அகிலேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தனியார் பள்ளி நடன ஆசிரியருக்கு அடி உதை!