ETV Bharat / bharat

பஞ்சாப் எல்லையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

author img

By

Published : Oct 20, 2021, 3:24 PM IST

எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Huge cache of weapons
Huge cache of weapons

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டரான் டரான் மாவட்டத்தில் உள்ள கேம்கரான் பகுதி, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியாகும். இங்கு பஞ்சாப் மாநில காவல்துறையினருடன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து இன்று (அக்.20) அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டுச் சோதனையில் 22 துப்பாக்கிகள், 100க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், ஒரு கிலோ ஹேராயின், 72 கிராம் ஓப்பியம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தப் பகுதியில் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களாக ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பாகிஸ்தானை ஓட்டிய எல்லைப் பகுதிகள் உஷார் நிலையில் உள்ளன.

மாநில காவல்துறையுடன் இணைந்து, எல்லைப் பாதுகாப்பு படை, ராணுவம், தேசிய புலனாய்வு முகமை என பல அமைப்புகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.