ETV Bharat / bharat

ரூ.8 ஆயிரம் திருடியதாக சந்தேகம்! கல்லூரி மாணவிகள் மீது வன்கொடுமை தாக்குதல்! - டெல்லி

8 ஆயிரம் ரூபாய் பணம் திருடியதாக கூறி நர்சிங் கல்லூரி மாணவிள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Delhi
Delhi
author img

By

Published : May 4, 2023, 9:46 PM IST

டெல்லி : தலைநகர் டெல்லியில் பணம் திருடியதாக இரண்டு நர்சிங் கல்லூரி மாணவிகள் நிர்வாணமாக துன்புறத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

டெல்லியில் உள்ள அஹில்யா பாய் நர்சிங் கல்லூரி விடுதியில் இரண்டு மாணவிகள் தங்கள் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி நர்சிங் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று விடுதியில் உள்ள மாணவிகள் மற்றும் வார்டன் உள்ளிட்டோர் மந்தி ஹவுஸ் பகுதியில் நடந்த கலாசார நிகழ்வில் கலந்து கொள்ள சென்றதாக கூறப்படுகிறது.

நிகழ்வு முடிந்து திரும்பிய போது விடுதி வார்டனின் பையில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் காணாமலல் போனதாக கூறப்படுகிறது. பணம் காணாமல் போனது குறித்து விடுதி வார்டன் மாணவிகளிடம் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது மூன்றம் ஆண்டு பி.எஸ்சி நர்சிங் படிக்கும் மாணவிகள் இருவர் தான், தனது பணத்தை திருடியதாக வார்டன் கூறியுள்ளார்.

மேலும் இரு மாணவிகளையும் பணத்தை திருப்பித் தரக் கோரி வார்டன் அதட்டியதாக கூறப்படுகிறது. பணம் திருடு போனது குறித்து தங்களுக்கு தெரியாது என மாணவிகள் தெரிவித்தும் வார்டன் விடவில்லை என சொல்லப்படுகிறது. மாணவிகளின் உடைமைகளை பரிசோதனை செய்த வார்டன், பின்னர் இருவரையும் நிர்வாணமாக்கி தேடியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Bihar: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை - பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!

மேலும் மாணவிகள் இருவரையும் வார்டன் துன்புறுத்தி பணத்தை திருப்பித் தருமாறு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள் இருவரும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். சம்பவம் குறித்து அறிந்து நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டெல்லி மதுபான வழக்கில் மணீஷ் சிசோடியா முக்கிய குற்றவாளி? - அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

இதையடுத்து போலீசில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்தது குறித்து விசாரிக்க கல்லூரி முதல்வர் தலைமையில் மூத்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சர்ச்சையில் சிக்கிய விடுதி வார்டன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்லூரி மாணவிகளிடையே விடுதி வார்டன் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : நடிகர் சுதீப்பை காண குவிந்த ரசிகர்கள் - கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.