மேஷம்
இன்று, நீங்கள் தனியாக இருந்தால்கூட, உண்மையில் தனிமையாக உணரக்கூடாது. உங்களை மேலும் அதிக அளவு கற்பனையாக வெளிப்படுத்துவதற்காக உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு, நடக்க விரும்புவீர்கள், உங்கள் மவுனத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய அன்பானவர்களோடு மாலை நேரத்தைச் செலவிடுங்கள்.
ரிஷபம்
இன்று, உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் இயங்காமல், அதற்குப் பதிலாக, நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருந்தன்மையுடனும் திறந்த மனத்துடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
மிதுனம்
இன்று, உங்கள் பணிகளைச் செய்து முடிக்க மூளையைக் கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும். இருந்தாலும் தாழ்மையுடன் நடந்துகொள்வதும் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. உண்மையில் நீங்கள் முதலாளியாக இல்லாவிட்டாலும்கூட, அதுபோன்ற தோரணையைக் காட்ட வேண்டியிருக்கும். உங்கள் அசாதாரண புத்திசாலித்தனம், அபாரமான செயல்திறனாக வெளிப்பட்டு இன்று உங்களுக்குப் பாதுகாப்பான அரணாகும். குடும்பம்தான் உங்கள் வெற்றிக்கு அடித்தளம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
கடகம்
கடினமாக உழைத்து வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கான இடத்தை தக்கவைப்பீர்கள். கூட்டாளிகளுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். நெகிழ்வும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் நிலவும். உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்து இன்றைய மாலைப் பொழுதை உல்லாசமாகச் செலவிடுவீர்கள்.
சிம்மம்
இன்று உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கியத் தருணமாக இருந்தால் அதற்கு ஆச்சரியப்பட வேண்டாம். இது சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாகக் கையாண்டு, நாசூக்காகச் செயல்பட வேண்டும். நடுநிலைமையைக் கடைப்பிடியுங்கள்! இன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயர்ந்து மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.
கன்னி
இன்று உங்கள் மனத்தில் யோசனைகள் பொங்கி வழியும். உங்கள் கடமைகளுடன், தற்போதைய வேலையை ஒப்பிட்டு குழம்புவீர்கள். புதிய தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரைவிட ரத்தம் அடர்த்தியானது என்பதற்கு ஏற்ப, குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களுடம் மேலும் நெருக்கமாவார்கள்.
துலாம்
உங்கள் உயர்வான குணம், இளகிய மனத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பலர் முயற்சிப்பார்கள். சிறிய பிரச்சினைகள் பெரிதாக வளர்ந்து, உங்கள் இயல்பை மாற்றி, கோபத்தை அதிகரிக்கச் செய்யும். பண விவகாரங்களில் அதிக ரிஸ்க் எடுக்க உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். உங்கள் மனத்தை நிலையாக வைத்துக்கொண்டால், இழந்த நிம்மதியை மீண்டும் பெறலாம்.
விருச்சிகம்
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி, உடல்பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள், சந்தோஷமாக இருங்கள்.
தனுசு
இன்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளும் நடுநிலையாளராக மாறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களைக் கண்டறிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஓரளவு கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும், இறுதியில் நீங்கள் விரும்பியதைச் சாதிக்கவும், அதற்கு நியாயமான தீர்வையும் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.
மகரம்
உங்களுக்கு ஒப்படைக்கப்பட வேலையின் அளவு அதிகமாக இருப்பதால் நாள் முழுக்க நிற்கவே நேரம் இருக்காது. அது உங்கள் உற்சாகத்தை குறைக்கச் செய்யும். பிற்பகலில் நீங்கள் சோர்வடைந்துவிடுவீர்கள். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, கவனமாகச் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்.
கும்பம்
சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்களுக்கு இன்று அந்த முயற்சியில் வெற்றிகிட்டும். எனினும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, உங்களுடைய சொந்த முன்னுரிமைகள், நலன்களை தியாகம் செய்ய வேண்டும். ஒரு சமாதான செயலராகச் செயல்படுவது நல்ல விஷயம் என்றாலும், பிறர் அதைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
மீனம்
இன்றைய நாள் முழுவதும் காதல் துணையோடு பிஸியாக இருப்பீர்கள். காதல் துணை இல்லாதவர்கள், தனக்குப் பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பதிலும், திருமணமானவர்கள் தங்கள் உறவில் ஒரு புதிய நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்படுவார்கள். பணி தொடர்பான உங்கள் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் மிகவும் கவனமாக மாறிவிடுவீர்கள். இந்த மாற்றங்களின் பலன்களைச் சற்று காலத்திலேயே நீங்கள் அனுபவிக்க முடியும்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்!