ETV Bharat / bharat

நம்பிக்கையில்லா தீர்மானம் 2வது நாள்: அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இராணி உரை! - மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்

மக்களவையில் நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.

Parliament
Parliament
author img

By

Published : Aug 9, 2023, 12:31 PM IST

Updated : Aug 9, 2023, 3:10 PM IST

டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதத்தில் மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூர் விவாகரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம், பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி கடந்த ஜூலை 26 ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்ட். 8) மக்களவையில் தொடங்கியது.

மக்களவை எதிர்க்கட்சி துணை தலைவரும், அசாம் மாநில எம்.பியுமான கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர்.

அதேபோல் மத்திய அரசு தரப்பில் எம்.பி. நிஷிகாந்த் துபே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் விவாதித்தனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் இன்று (ஆகஸ்ட். 9) நடக்கிறது. 11 மணிக்கு அவை தொடங்கியதும், கேள்வி நேரம் நடைபெறும்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைப்பார். 12 மணிக்கு மீண்டும் மக்களவைக்கு வந்த ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். மோடி அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தியை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக உரையாற்ற உள்ளார். அவரைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராமி உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாலை நடைபெறும் அடுத்த அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூரில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள், மாநில அரசு மேற்கொண்ட மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து அமித் ஷா உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானத்தின் 2வது நாள் விவாதம்.. மக்களவையில் ராகுல் காந்தி உரை!

Last Updated : Aug 9, 2023, 3:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.