ETV Bharat / bharat

Parliament: புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறப்பு.. பழைய நாடாளுமன்ற கட்டடம் என்ன ஆகும்? - எல்கே அத்வானி

புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்படும் நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடம் சுமந்து கொண்டிருக்கும் வரலாற்றுச் சுவடுகளைக் காணலாம்.

அருங்காட்சியகமாக மாற்றப்படுமா பழைய நாடாளுமன்ற கட்டடம்?.. ஒரு வரலாற்றுப் பார்வை

author img

By

Published : May 28, 2023, 7:22 AM IST

Updated : May 28, 2023, 12:49 PM IST

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இன்று (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க உள்ளது. இந்த நிலையில், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நாடு சுதந்திரம் அடைந்தபோது வாசிக்கப்பட்ட 'ட்ரிஸ்ட் வித் டெஸ்டினி' (Tryst with destiny) என்ற உரையை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கவுன்சில் கட்டடம் என்று அழைக்கப்படக் கூடிய பழைய நாடாளுமன்ற கட்டடமானது 98 அடி விட்டம் கொண்ட மத்திய அறையைக் கொண்டுள்ளது.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அன்று சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த நாடாளுமன்றம், 1951 - 1952இல் தனது முதல் பொதுத் தேர்தலைச் சந்தித்தது. 1952ஆம் ஆண்டு ஏப்ரலில் இதற்கான முடிவு வெளியாகி, அதிகாரப்பூர்வ ஒரு அரசை இந்த நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது.

சன்சத் மார்க் பகுதியின் முடிவில் உள்ளதால் சன்சத் பவன் என்று அழைக்கப்படக் கூடிய இந்த நாடாளுமன்றம், மக்களவை, மாநிலங்களவை மற்றும் நூலக வளாகத்தையும் கொண்டுள்ளது. இதனை இன்னும் அழகூட்டும் விதமாக இதனிடையே அழகிய தோட்டமும் உள்ளது. அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முக்கிய அலுவலர்கள், தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற கமிட்டி பிரமுகர்களுக்கு உள்ளேயே குடியிருப்பும் உள்ளது.

1956ஆம் ஆண்டு நாடாளுமன்ற கட்டடத்தில் 2 தளங்கள் சேர்க்கப்பட்டு, அதன் இடவசதி அதிகப்படுத்தப்பட்டது. இந்திய ஜனநாயகத்தின் தன்மையை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக, 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற அருங்காட்சியமாக விரிவுபடுத்தப்பட்டது. அதிலும், நாள்தோறும் மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஒலி - ஒளி கானொளி, மிகப்பெரிய அளவிளான கணினி திரைகள் மற்றும் விர்ச்சுவல் தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளையும் இந்த நாடாளுமன்றம் கொண்டுள்ளது. குறிப்பாக, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நுகர்வோர் நலத்துறை, உணவு மற்றும் பொது விநியோகம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். அதேநேரம், அப்போதைய பாஜக உடன் கூட்டணி வகித்த அதிமுக தனது ஆதரவை கைவிட்டதால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தனது ஆட்சியை இழந்தது.

பிரிட்டிஷ் - இந்தியாவின் இருதரப்பு கட்டடக் கலைகளை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த கட்டடத்தில்தான், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது உரையை நிகழ்த்தியது முதல் 1962ஆம் ஆண்டு சீனா - இந்தியா இடையேயான ஒருமனதானத் தீர்வு வரை பல பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன.

1972ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, வங்காளதேசத்தை உருவாக்கி, பாகிஸ்தானை விட்டு வெளியேற்றிய நிகழ்வும் இங்குதான் அரங்கேறி உள்ளது. 1991ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ், திறந்த வெளி சந்தைப் பொருளாதாரத்தை அறிவித்து, இந்தியாவை சர்வதேச பொருளாதாரச் சந்தையில் அறிமுகப்படுத்தினார்.

அதேநேரம், கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவராக இருந்த பிரனாப் முகர்ஜி ஆகியோர் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதேநேரம், சில வரலாற்று நிகழ்வுகளை நாடாளுமன்றம் தனது நினைவுகளில் இருந்து மறக்க வேண்டி இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 352இன் கீழ், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவராக இருந்த ஃபக்ருதீன் அலி அகமது எமர்ஜென்சியை அறிவித்தார். இது 1975ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1977ஆம் ஆண்டு மாரச் 21 வரை இருந்தது.

இந்த காலகட்டத்தில், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு சிறை, பத்திரிகைகளுக்கு தணிக்கை, தேர்தல் ரத்து, தனி மனித சுதந்திரம், மனித உரிமை மீறல்கள் ஆகியவை ஆட்சி செய்தன. மேலும், 2001ஆம் ஆண்டு டிசம்பரில், தடை செய்யப்பட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜாய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் உள்துறை அமைச்சகத்தின் சின்னம் பொருத்திய போலி வெள்ளை அம்பாசிடர் காரில் வந்து, ஏகே 47 துப்பாக்கி, குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றால் நாடாளுமன்றத்தைத் தாக்கினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மக்களவை உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்டாலும், 9 பேரை இந்தியா இழந்தது. மேலும், 6 டெல்லி காவல் துறையினர் மற்றும் 2 நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் எல்கே அத்வானி, ‘ஜனநாயகத்தை அழிப்பதற்கான பயங்கரவாத தாக்குதல்’ என வரையறுத்தார். இப்படிப்பட்ட பல்வேறு வலிகளையும், வரலாற்றையும் தாங்கி நிற்கும் பழைய நாடாளுமன்ற கட்டடம் அருங்காட்சியமாக மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க: டெல்லியில் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கிய மதுரை 293-ஆவது ஆதீனம்!

Last Updated : May 28, 2023, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.