ETV Bharat / bharat

"இந்து என்ற சொல்லின் உண்மை அர்த்தம் தெரிந்தால் வெட்கப்படுவீர்கள்" - காங்கிரஸ் எம்எல்ஏவின் பேச்சால் சர்ச்சை - மனிதனை மனிதனாக நடத்துவது அவசியம்

'இந்து' என்ற சொல் பெர்சியாவிலிருந்து வந்தது, இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? என கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் சதீஷ் ஜாரகிஹோலி கேள்வி எழுப்பினார். இந்து என்ற சொல்லின் உண்மை அர்த்தம் ஆபாசமானது என்றும் தெரிவித்தார்.

term c
term c
author img

By

Published : Nov 7, 2022, 8:26 PM IST

பெலகாவி: கர்நாடக மாநிலம், நிப்பானி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான சதீஷ் ஜாரகிஹோலி காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் ஜாரகிஹோலி, இந்து என்ற சொல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவர் கூறுகையில், "இந்து என்ற சொல் எங்கிருந்து வந்தது? அது பாரசீகத்திலிருந்து வந்தது. அதற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? அந்த சொல் எப்படி உங்களுடையதானது? வாட்ஸ்அப், விக்கிபீடியா போன்றவவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும். அந்த சொல் உங்களுடையது அல்ல. அதை ஏன் பீடத்தில் போட நினைக்கிறீர்கள்?

இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். எங்கிருந்தோ கொண்டு வந்த ஒரு சொல் நம் மீது திணிக்கப்படுகிறது. இந்து என்ற சொல் ஆபாசமான பொருள் கொண்டது. அதன் உண்மை அர்த்தம் தெரிந்தால் வெட்கப்படுவீர்கள்.

மனிதனை மனிதனாக நடத்துவது மிகவும் அவசியம். சாதியின் அடிப்படையில் ஒருவரை பார்க்கக்கூடாது. சாதியம் போன்ற போன்ற தீய பழக்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அதனால்தான் இந்த அமைப்பை எதிர்த்துப் போராடுகிறோம்.

ஒரு எருமை நாள் முழுவதும் தண்ணீரில் இருக்கிறது. ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தொட்டால், அந்த நீர் தூய்மையற்றது என்று கருதப்படுகிறது. எங்கள் போராட்டம் இதற்கு எதிரானது.

எல்லோரும் சேர்ந்து நன்கொடை கொடுத்து கோயில் கட்டுகிறோம். ஆனால், கோயில் கட்டி முடித்த பிறகு தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. கோயில்களில் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ஏனாம் பகுதி புறக்கணிக்கப்படுவதாக எம்எல்ஏ உண்ணாவிரதப்போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.