கர்நாடகா: தக்ஷின கன்னடா(dakshina kannada) மாவட்டம் பந்த்வாலா நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தில் திடீரென இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்தில் இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் வேறு மதத்தைச் சேர்ந்த நண்பருடன் பெங்களூரு நோக்கி சென்றுள்ளார்.
இந்த தகவல் பேருந்தில் பயணித்த பஜ்ரங்க் தால் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து நடுவழியில் பேருந்தை நிறுத்திய அவர்கள், இளம் பெண் மற்றும் இளைஞருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நெடுஞ்சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளம்பெண் மற்றும் இளைஞரைத் தனியாக அழைத்துச் சென்றனர். பின்னர் இளம் பெண் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் பெண் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: 'எல்லா சமூக மக்களையும் இணைக்கும் பாலம் சினிமா' - நடிகர் ஷாருக் கான்