பஞ்சாப் மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள பல்வேறு கோரிக்கைகளை மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்துள்ளார்.
அதில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை 197 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் தற்போது 300 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
எனவே, இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்க வேண்டும். அதேபோல மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தட்பாடு நிலவுகிறது. தற்போதைக்கு மத்திய அரசு சார்பில் 1.63 லட்சம் டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இவை மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. இதன்காரணமாக 18 வயதுகக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது என்றார்.