ETV Bharat / bharat

ஹிஜாப் மறுப்பு : உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் முறையீடு!

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து அமர தடை விதிக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.

Supreme Court
Supreme Court
author img

By

Published : Mar 28, 2022, 3:08 PM IST

டெல்லி : கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்த தீர்ப்புக்கு எதிராக டெல்லி இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து அமரக் கூடாது எனச் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் அணிய தடை விதித்து மார்ச் 15ஆம் தேதி (2022) தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மேல்முறையீட்டு மனுவில், “பிப்ரவரி 5, 2022 தேதியிட்ட அரசு ஆணை, அப்பட்டமாக பாகுபாடாகவும், வகுப்புவாத நிறமாகவும் உள்ளது. மேலும், இது பொதுவாக முஸ்லிம்கள் மற்றும் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், குரானில் ஹிஜாப் புனிதமானதாக கூறப்பட்டுள்ளது. ஹிஜாப்-ஐ பின்பற்றாவிட்டால் அவள் பாவம் செய்தவள் ஆகிவிடுவாள்” எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Hijab ban in classroom: ஹிஜாப் அவசர வழக்கு கோரிக்கை நிராகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.