ஐ.என்.எக்ஸ். மீடியா நிதி முறைகேட்டு வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
2017ஆம் ஆண்டில் சிபிஐ பதிவு செய்த வழக்கு விசாரணை, டெல்லி சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் விசாரணை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம், சிறப்பு விசாரணை நீதிமன்ற வழக்கின் விசாரணையை நிறுத்திவைக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள அமைச்சரவையில் ஷைலஜா டீச்சருக்கு இடம் மறுப்பு: பின்னணி என்ன?