ETV Bharat / bharat

"மாப்பிள்ளை தேவை" - விளம்பரப் பலகை வைத்த பெண்...! - ஜார்க்கண்ட்

திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுவதாக பெண் ஒருவர் விளம்பரப் பலகை வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

hazaribagh
hazaribagh
author img

By

Published : Jun 12, 2022, 2:12 PM IST

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த சுஷ்மிதா தே என்ற பெண், தான் திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை தேடுவதாக விளம்பர பலகை வைத்துள்ளார்.

அதில், "மாப்பிள்ளையின் வயது 30 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். நன்றாக படித்தவராக, குடும்பத்தை கவனித்துக் கொள்பவராக இருக்க வேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை, பொறுப்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விளம்பரத்தின் கீழே தனது முகவரியையும், தொடர்பு எண்ணையும் அந்த பெண் கொடுத்துள்ளார். இந்த விளம்பர பலகை, ஜந்தா சவுக் பகுதியில் உள்ள திருமண மஹாலுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தது. பெண் ஒருவர் நூதன முறையில் மாப்பிள்ளை தேடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: புதிய தேசிய கட்சியை தொடங்குகிறார் சந்திரசேகர ராவ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.