சோனிபட் (ஹரியானா): ஹரியானா மாநிலம் சோனிபட் மீரட்-ஜஜ்ஜார் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 21) மாலை அதிவேகமாக வந்த கார் தடுப்பில் தி தீப்பற்றியதில் ரோஹ்தக் பிஜிஐயைச் (Rohtak PGI) சேர்ந்த மூன்று மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், "மாணவர்கள் ஆறு பேர் ஹூண்டாய் ஐ20 காரில் ரோஹ்தக்கில் இருந்து ஹரித்வாருக்குச் சென்று கொண்டிருந்தனர். சோனிபட் மீரட்-ஜஜ்ஜார் மேம்பாலத்தில் பணிகள் நடைபெற்று வருவதால், கல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிவேகமாக வந்த கார் தடுப்புகள் மீது மோதியதில் தீப்பற்றியது. இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் புல்கித், சந்தேஷ், ரோஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அங்கித், நர்வீர் மற்றும் சோம்வீர் ஆவர். காயமடைந்தவர்களுக்கு ரோஹ்தக் பிஜிஐயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 'இப்படியும் சில மனிதர்கள்' - பணப்பிரச்னையால் தங்கையை கத்தியால் குத்திய அண்ணன்..!