ETV Bharat / bharat

உலகக் கோப்பை கிரிக்கெட்: கே.எல்.ராகுல் சதத்திற்கு வேட்டு வைத்த ஹர்திக் பாண்டியா! - india

ICC World Cup: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் தனது சதத்தை தவறவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

kl rahul
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:19 PM IST

Updated : Oct 9, 2023, 6:42 PM IST

ஹைதராபாத்: நேற்று நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 2023 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஆறு சிக்ஸர்கள் அடித்தன. இந்த விளையாட்டு போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் ரசிகர்கள் மறக்க முடியாதவையாக மாறி உள்ளன. முதலில் ஹர்திக் பாண்டியா அடித்த ஸ்பாய்லர் சிக்ஸ், இரண்டாவதாக, கே.எல்.ராகுல் அடித்த வின்னிங் ஹாட் சிக்ஸ்.

விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் பாட்னர்ஷிப் இந்திய அணிக்கு தேவையான ரன்களை குவித்தது. இருவரும் சதத்தை நோக்கி விளையாடி கொண்டிருக்கும் வேளையில், விராட் கோலி 85 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். விராட் கோலி ஆட்டமிழக்கையில் ராகுல் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவரின் சதத்திற்கு தேவையாக இருந்ததோ 25 ரன்கள். அதே சமயம் இந்திய அணி வெற்றி பெற 32 ரன்கள் தேவையாக இருந்தது.

கோலி பெவிலியன் திரும்பிய பிறகு களம் வந்த ஹர்திக் பாண்டியா 4 ரன்கள் எடுத்து இருந்த போது 39.5 ஒவர் பந்தில் சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸை அவர் அடிக்காமல் கே.எல்.ராகுலுக்கு வழி விட்டு இருந்தால் அவர் சதம் அடித்து இருபார் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இறுதியில் வெற்றிக்கு தேவை 5 ரன்களாக இருந்த போது, ராகுல் நான்கு ரன்னும், ஒரு சிக்ஸரும் அடித்தால் இந்திய அணி வெற்றியும் பெறும் அதே சமயம் நாம் சதத்தையும் எட்டி விடலாம் என திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஆவர் எஸ்ட்ரா கவர் மேல் அடித்த ஹாட் எதிர்பாராத விதமாக சிக்ஸ் ஆகிவிட்டது. இதனால் அவர் சதத்தை எட்ட முடியாமல் போனது. இருப்பினும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுக்கொடுத்தார்.

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் இந்த போட்டி கடுமையாகவே இருந்தது. மேலும், ஒவ்வொரு போட்டியிலும், சிறந்த ஃபினிஷராக இருக்கும் விராட் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதுவரை விராட் கோலி 47 சதங்களை ஒருநாள் தொடரில் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: சட்டவிரோதமாக டிக்கெட் விற்ற 30 பேர் கைது..!

Last Updated : Oct 9, 2023, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.