Harbhajan Singh announces retirement: இந்திய கிரிக்கெட் அணியின் 'லேஜண்டிரி ஸ்பின்னர்' ஹர்பஜன் சிங் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே ஹர்பஜனின் ஓய்வு குறித்து பேசப்பட்டது. இந்நிலையில் அவரே ஓய்வு குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இதனை குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது,
-
All good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
My heartfelt thank you 🙏 Grateful .https://t.co/iD6WHU46MU
">All good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021
My heartfelt thank you 🙏 Grateful .https://t.co/iD6WHU46MUAll good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021
My heartfelt thank you 🙏 Grateful .https://t.co/iD6WHU46MU
‘அனைத்து நல்ல செயல்களும் இன்றுடன் முடிவடைகிறது. எனக்கு எல்லாவற்றையும் அளித்த கிரிக்கெட்டிடமிருந்து நான் விடைப்பெற்றுக் கொள்கிறேன்.
இந்த அழகான 23 ஆண்டுகள் பயணத்தை வழங்கிய அனைவருக்கும் நன்றி. என் இதயம் கனிந்த நன்றியை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்து இருந்தார்.
இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்-ஹர்பஜன்
ஹர்பஜன் சிங் 1998ஆம் அண்டு மார்ச் 25ஆம் தேதி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடினார்.
ஒரு நாள் டெஸ்ட், டி-20 என ஒட்டுமொத்தமாக 1200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய அணி வென்ற முக்கியப் போட்டிகளான 2007 டி-20 உலகக் கோப்பை அணியிலும், 2011 உலகக் கோப்பை அணியிலும் ஹர்பஜன் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்ம வீட்டுப் பிள்ளையான ஹர்பஜன்
2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ், சென்னை அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் வீரராக விளையாட ஆரம்பித்த நாள் முதல் இவர் தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவே மாறி விட்டார்.
தமிழ்நாட்டின் பிரச்னை முதல் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வாழ்த்து வரை ட்விட்டரில் பதிவுகளை பறக்கவிட்டு உள்ளார்.
இதனைத்தொடர்ந்து அடிக்கடி தமிழில் ட்விட் செய்வது, தமிழ் வெப் சீரிஸில் திருவள்ளுவர் வேடமேற்று நடிப்பது, மேலும் சில தமிழ்ப் படங்களில் கமிட் ஆவது என ஒட்டு மொத்த தமிழனாகவே மாறிவிட்டார், ஹர்பஜன் சிங்.
இதையும் படிங்க:டெஸ்ட் தொடரில் துணை கேப்டனான கே.எல்.ராகுல்