ETV Bharat / bharat

பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... 5 பேர் கைது

உத்தர பிரதேசம் அருகே ஆறு பேர் சேர்ந்த கும்பல் ஒன்று, பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், ஒரு மைனர் உள்பட மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்

author img

By

Published : Aug 19, 2022, 7:00 AM IST

ஹமிர்பூர்: டெல்லி நிர்பயா கொடூர சம்பவத்தை போன்று சமீபத்தில் உத்தர பிரதேசத்திலும் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியான சர்தார் கோட்வாளி எனும் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், ஆறு இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளம்பெண்ணின் ஆடையை அகற்றி அத்துமீறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்த இளைஞர்கள் கையில், பெல்ட் மற்றும் குச்சிகளுடன், நிர்வாணமாக நிற்கும் அப்பெண்ணை கொடூரமாக தாக்குகின்றனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த வீடியோவில் மாணவியிடம் அத்துமீறும் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அதில் மைனர் ஒருவரும் அடக்கம்.

அப்பெண்ணை, இந்த கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இதை ஹமிர்பூர் காவல் கண்காணிப்பாளர், ஷுபம் படேல் மறுத்து, அவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபடவில்லை என்றும், கைதானவர்களில் தற்போது மூன்று பேரை காவலில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு இளைஞருடன் அந்த பெண் ஹமிர்பூரின் வனப்பகுதிக்கு வந்துள்ளார் என்றும் அவர்களை அந்த கும்பல் பார்த்துள்ளதும் தெரியவந்தது. மேலும், இருவர் மீதும் கொடூர தாக்குதல் நடத்திய அந்த கும்பல், அப்பெண்ணின் ஆடையை அகற்றி கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணை காணவில்லை என்றும் அவர் குறித்த தகவல்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னையா சர்மா (42), பிரித்தம் சர்மா (18), முகமது ஃபைசல் ஆகியோரை முதலில் காவலில் எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் கௌரா தேவி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அவர்களை தொடர்ந்து, அரவிந்த் (எ) கமல் நிஷாத் மற்றும் மைனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறை ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஒருவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2018 பாலியல் புகார் விவகாரம்... டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜக பிரமுகர் உச்ச நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.