ஆனந்த் (குஜராத்): அமெரிக்காவின் வர்ஜீனியாவில் கடை நடத்திவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரேயேஷ் படேல் மற்றும் அவரது ஊழியர் முகமூடி கொள்ளையரால் நேற்று (ஜூன் 16) மாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் பிரேயேஷ் படேல் (52), அமெரிக்காவின் வர்ஜீனியாவில் செவன் லெவன் என்ற கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முகமூடி அணிந்தபடி கடைக்குள் புகுந்த கொள்ளையர் பிரேயேஷ் படேலையும், அவரது ஊழியர் லோகன் எட்வர்ட் தாமஸ் (35) இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பொருட்களை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேயேஷ் படேல், குஜராத் மாநிலம் சோஜித்ரா பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் குடியேறி அங்கு கடை நடத்தி வந்துள்ளார். பிரேயேஷ் குடும்பத்தினர் குஜராத்தின் வித்யா நகரில் வசித்து வருகின்றனர். இவரது சகோதரர் தேஜஸ் படேல் பிதான்நகர் நகர பாஜக தலைவராக உள்ளார். பிரேயேஷ் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து அவரது குடும்பத்தினர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டம்