இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகளில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவகங்கள் சங்கத் தலைவர் நரேந்திர சோமானி, "மாநிலத்தில் உள்ள உணவகங்கள், விடுதிகள் அனைத்திலும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையாவது செலுத்திய வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
கரோனா தொற்றுப்பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. எனவே, உணவக உரிமையாளர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும்" என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உடனடியாக மதிய உணவுத் திட்டத்தை தொடங்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்