காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதரா நந்தேசரியில் நைட்ரைட் ரசாயன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று (ஜூன் 3) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், இந்த தீ விபத்து காரணமாக வெளியான புகையை சுவாசித்த ஏழு தொழிலாளர்களுக்கு மூச்சு திறணல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலையை சுற்றிய பகுதிகளில் வசித்து வந்த சுமார் 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பயங்கரம்: பஸ் - லாரி மோதி 5க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு