அகமதாபாத்: குஜராத் மாநிலம் பாலம்பூரில் நேற்றிரவு 11:30 மணியளவில் சுயேச்சை எம்எல்ஏவும் பட்டியலினத் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அகமதாபாத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த திடீர் கைது நடவடிக்கைக்கான காரணம் குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை என்று கண்டனங்கள் எழுந்தன.
-
Just received this message from a friend of @jigneshmevani80 .. Jignesh has been arrested from Palampur circuit house by Assam Police right now. His phones have been withheld. No one has the FIR Copy.. What’s going on? Why is #JigneshMevaniArrested #FreeJigneshMevani RT & share pic.twitter.com/QB7ZSQxvl7
— Swara Bhasker (@ReallySwara) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just received this message from a friend of @jigneshmevani80 .. Jignesh has been arrested from Palampur circuit house by Assam Police right now. His phones have been withheld. No one has the FIR Copy.. What’s going on? Why is #JigneshMevaniArrested #FreeJigneshMevani RT & share pic.twitter.com/QB7ZSQxvl7
— Swara Bhasker (@ReallySwara) April 20, 2022Just received this message from a friend of @jigneshmevani80 .. Jignesh has been arrested from Palampur circuit house by Assam Police right now. His phones have been withheld. No one has the FIR Copy.. What’s going on? Why is #JigneshMevaniArrested #FreeJigneshMevani RT & share pic.twitter.com/QB7ZSQxvl7
— Swara Bhasker (@ReallySwara) April 20, 2022
இதுகுறித்து, கோக்ரஜார் காவல்துறை கண்காணிப்பாளர் துபே பிரதீக் விஜய்குமார் கூறுகையில், "குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்ட பாஜக தலைவர் அருப் குமார் புகார் அளித்தார். அதனடிப்படையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜிக்னேஷ் மேவானி மீது 120பி (குற்றச்சதி), பிரிவு 153(ஏ) (இரு சமூகத்தினரிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295(ஏ), 504 (அமைதியை சீர்குலைத்தல்) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சமூக வலைதளப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய ட்வீட்டும் நீக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
-
Vadgam MLA Jignesh Mevani arrested by Assam police from Palanpur circuit House. Police yet to share the copy of the FIR with us, we have been informed about some case filed against him in Assam and is likely to be deported to Assam tonight.
— Kanhaiya Kumar (@kanhaiyakumar) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
-Team Jignesh Mevani pic.twitter.com/Bn0cbX1a9I
">Vadgam MLA Jignesh Mevani arrested by Assam police from Palanpur circuit House. Police yet to share the copy of the FIR with us, we have been informed about some case filed against him in Assam and is likely to be deported to Assam tonight.
— Kanhaiya Kumar (@kanhaiyakumar) April 20, 2022
-Team Jignesh Mevani pic.twitter.com/Bn0cbX1a9IVadgam MLA Jignesh Mevani arrested by Assam police from Palanpur circuit House. Police yet to share the copy of the FIR with us, we have been informed about some case filed against him in Assam and is likely to be deported to Assam tonight.
— Kanhaiya Kumar (@kanhaiyakumar) April 20, 2022
-Team Jignesh Mevani pic.twitter.com/Bn0cbX1a9I
இதனிடையே மேவானியின் வழக்கறிஞர் பரேஷ் வகேலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த கைது நடவடிக்கை பொய் புகார்கள் மூலம் எங்களுக்கு மிரட்டல் விடுக்கும் முயற்சியே. இதுபோன்ற புகார்களுக்கு ஜிக்னேஷ் மேவானியோ, காங்கிரஸோ பயப்படப்போவதில்லை. எங்கள் வழக்கறிஞர் குழு அவரை போராடி விடுதலை செய்யும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீக்கம் செய்யப்பட்ட அந்த ட்வீட்டில் கோட்சேவை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் கைது!