2019 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் பேசினார். அப்போது, 'நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோர் வரிசையில் நரேந்திர மோடி' எனத் தெரிவித்தார்.
இந்த விமர்சனம் சாதி ரீதியாக இருப்பதாகக் கூறி மோடி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ பர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்துவந்த சூரத் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் ஜூன் 24ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) சூரத் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநரின் உரை ட்ரெய்லர் தான்.. அண்ணாவின் அரசியல் வாரிசு நான்: அதிரடி பேச்சில் அசரடித்த ஸ்டாலின்